இனி 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணமில்லை.... தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லை என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு பேருந்துகளில் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டணம் இல்லை என இருந்த நிலையில் இதை ஐந்து வயது வரை உயர்த்தி சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாதி கட்டணம் என்றும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.  
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات