தமிழ்நாட்டில் முதல்முறையாக ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை 38 மாவட்டங்களில் 34,792 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகின்றன. ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆகவும், பகுதி நேரக் கடைகள் 9,388 ஆகவும், ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டைகளுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரான சண்முகசுந்தரம் அவர்கள் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரேஷன் கடைகளில் ஆவின் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் ஆவினுடன் சேர்ந்து கூட்டுறவுத்துறை சார்பில் புதிய ஆவின் மையங்கள் திறக்கப்படும்” என்றும் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன. பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொருத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.
அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் முதல்முறையாக ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது அதன்படி நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய 2 மாவட்டங்களில் முதற்கட்டமாக இந்த செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 கிலோ கேழ்வரகு இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
ரேஷன் பொருட்களில் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. உணவு பொருட்கள் சுத்தமாக கிடைக்க வேண்டும். எடையில் ஏமாற்றம் செய்ய கூடாது என்பதால் பொருட்களை நியாயவிலை கடைகளில் பாக்கெட்டுகள் மூலமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அரிசி, சர்க்கரை. கோதுமை உள்ளிட்ட பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை எடையில் மாற்றம் இருக்காது. பொருட்களும் பூச்சி இல்லாமல் சுத்தமாக இருக்கும்.
என்ற புகார் எண்
ரேஷன் பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை, ரேஷன் ஊழியர்கள் ஊழல் செய்கிறார்கள், முறைகேடு செய்கிறார்கள் என்று தோன்றினால் அதை பற்றி புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்காக 18004255901 என்ற புகார் எண் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு ரேஷன் தொடர்பான புகார்களை தெரிவிக்க முடியும்.
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.