தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா உடையநாட்டில் ராஜராஜன் கல்வி நிறுவனம் மற்றும் கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்திய மாநில அளவிலான தடகளப் போட்டி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர் தலைமை வகித்தார். ராஜராஜன் கல்வி நிறுவன தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் அனைவரையும் வரவேற்றார். பெருமகளூர் பேரூராட்சி தலைவர் சுந்தரத்தமிழ் ஜெயபிரகாஷ், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், கறம்பக்காடு ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா குகன், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, மாவட்ட கவுன்சிலர் இலக்கியா நெப்போலியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சேதுபாவாசத்திரம் தலைவர் மு.கி.முத்து மாணிக்கம், ஒன்றியக் கவுன்சிலர் குழ. செ. அருள் நம்பி, ஊமத்நாடு ஊராட்சி மன்றத் தலைவர் குலாம் கனி, அழகப்பா கல்விக் குழுமம் மாதவன், மதன்பட்டஊர் முரளி கிருஷ்ணன், பேராவூரணி வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சுவாதிகாமராஜ், வீரியங்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் பரிமளா அய்யப்பன், பேராவூரணி சிவ சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்ஷனா மருத்துவமனை டாக்டர் துரை. நீலகண்டன் பள்ளிக் கொடியை ஏற்றினார். தஞ்சாவூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக மாவட்ட துணைத் தலைவர் தென்னங்குடி ராஜா ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.ஆர்.சந்திரசேகர் அகாடமி கொடியை ஏற்றினார். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பேராவூரணி திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், குருவிக்ரம்பை ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வைரவன், குருவிக்ரம்பை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் மனோகரன், லயன்ஸ் சங்க சாசன தலைவர் நீலகண்டன், பேராவூரணி கோக்கனட் சிட்டி லைன்ஸ் சங்க தலைவர் பாண்டியராஜன், வீரியங்கோட்டை மெஞ்ஞானம், ஏசியன் ட்ரேடர்ஸ் முகமது முஸ்கீர், அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மருத.உதயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ராஜராஜன் கல்வி நிறுவனம் மற்றும் கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி பொருளாளர் ஜெய்சங்கர், கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் எஸ்.நீலகண்டன், கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி துணைத் தலைவர் சிவ. சதீஷ்குமார், கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர் பாரதிராமன், கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் விழா குழுவினர் ஆகியோர் செய்து இருந்தனர்.
இரண்டு நாள் நிகழ்விற்கு கன்னியாகுமரி, கடலூர் முதலிய 12 மாவட்டங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக, கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் எஸ். நீலகண்டன் நன்றி கூறினார்.
செய்தி: முனைவர்
வேத கரம்சந்த் காந்தி செய்தியாளர்
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.