பேராவூரணியில் கோடைகால சிறப்பு உடற்பயிற்சி வகுப்பு

பேராவூரணியில் உள்ள  அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில்  கோடைகால சிறப்பு உடற்பயிற்சி வகுப்பு  துவக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து  அமிழ்  ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மற்றும் உடற்பயிற்சி  பயிற்றுனர் மருத உதயகுமார் கூறியதாவது,

பேராவூரணி நகரில் வசிக்கும் ஆறு வயது முதல்  15 வயது வரை உள்ள மாணவ, மாணவியரின் உடல் திறனை மேம்படுத்தவும், நேரத்தை  பயனுள்ளதாக பயன்படுத்தவும், பத்து நாட்கள் கோடைகால உடற்பயிற்சி வகுப்பு  துவக்கப்பட்டுள்ளது. மே 13-ம் தேதி முதல் காலை 6.30  முதல் 8.30 வரை பத்து நாட்கள் வகுப்புகள் நடைபெறும். இந்த பயிற்சியின் போது மாநில அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்த சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 

பயிற்சியின் போது மாணவ மாணவிகளுக்கு அடிப்படை வாம் அப்,  விளையாட்டுகளில் அடிப்படை நுணுக்கங்கள் விளையாட்டுகளின் அளவீடுகள்  பந்து எறிதல்,  குண்டு எறிதல், தடகள போட்டிகள்  மற்றும் யோகா முதலிய பல்வேறு உடல் நலம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன"  என்றார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات