பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட முன்னணி நிறுவனம் வாட்ஸ் அப். குறுஞ்செய்தி அனுப்புவது முதல் இமேஜ்கள், வீடியோக்கள், கோப்புகள் என அனைத்தையும் வாட்ஸ் அப்பில் அனுப்ப முடியும் என்பதால் வாட்ஸ் அப் யூசர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
வாட்ஸ் அப் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து விட்ட சூழலிலும் வாட்ஸ் மூலமாக சில மோசடி செயல்களையும் சிலர் அரங்கேற்றி வருகின்றனர். வாட்ஸ் அப்பை மையமாக வைத்து சைபைர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக பலருக்கு வெளிநாட்டு எண்களில் இருந்து திடீர் திடீரென அழைப்புகள் வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து இருந்தனர்.
குறிப்பாக எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற நாடுகளிள் இருந்தும் பலருக்கும் கால்கள் வந்துள்ளது. சில வினாடிகள் மட்டுமே வந்து விட்டு தானாகவே கட் ஆகிவிடுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு இருந்தனர். பலருக்கு ஏன் இப்படி மிஸ்டு கால் வருகிறது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சிலரோ அதே எண்ணிற்கு கால் செய்ய முயற்சித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து சம்பந்தமே இல்லாத அழைப்புகள் வந்தால் உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்:-
* அழைப்பு வந்தால் எடுக்கக் கூடாது. சம்பந்தமே இன்றி வரும் இதுபோன்ற வெளிநாட்டு அழைப்புகள் அந்தால் தயவு செய்து அதற்கு பதிலளிக்க வேண்டாம். இந்த கால்களுக்கு பதிலளித்தால் நீங்கள் மோசடிக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறது.
* பரிசுகள் விழுந்து இருப்பதாகவோ.. லாட்டரியில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்ற தகவலுடன் வரும் மெசேஜ்களை கிளிக் செய்ய வேண்டாம். அதுபோன்ற மெசேஜ்கள் வந்தால் உடனடியாக வாட்ஸ் அப்பிற்கு ரிபோர்ட் செய்யவும்
* ஒரே எண்ணில் இருந்து மீண்டும் மீண்டும் அழைப்புகள் வந்தால் உடனடியாக அதை பிளாக் செய்ய வேண்டும். கால் லாக்கில் எண்களை செலக்ட் செய்து பிளாக் செய்து விட முடியும்; அதேபோல், உங்களுக்கு வரும் அழைப்புகள் மோசடியானது என்று நீங்கள் கருதினால் உடனடியாக அந்த எண்ணை ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
* அதேபோல், வாட்ஸ் அப்பில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு அம்சமான two-factor authentication-வசதியை பயன்படுத்தலாம். இந்த வசதி மூலம் உங்கள் வாட்ஸ் அப்பிற்குள் செல்ல பாஸ்வேர்டுடன் வெரிபிகேஷன் கோடும் கேட்கும். இதனால் வேறும் யாரும் உங்கள் வாட்ஸ் அப்பை முறைகேடாக பயன்படுத்த முடியாது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.