இனி ரேஷன் கடையில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தலாம்: கூட்டுறவுத்துறை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாத கூகுள் பே, போன் பே, பேடி எம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்த கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

இதுகுறித்து கூட்டுறவுத்துறை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத் துறை பதிவாளர் சங்கர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, "தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள 683 நியாய விலைக்கடைகளிலும் விரைவு எதிர்வினை (QR Code) குறியீடு மூலம் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள எதுவாக கோயம்புத்தூர், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, மதுரை, சென்னை, வேலூர். இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய 12 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UP) வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதர மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் இன்னும் ஒருவாரத்தில் ஒருங்கிணைந்த பரிவர்த்தனை தரவு (UPI) வசதி ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, அனைத்து மண்டலங்களிலும் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் Paytm, Google Pay, Phone Pe போன்ற UPI வசதிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இது குறித்து தினசரி முன்னேற்ற அறிக்கையினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات