டாஸ்மாக் நிர்வாகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பு: முதல்வர் உத்தரவின்படி, 500 மதுக்கடைகள் கண்டறியப்பட்டு, மூடப்படும் என்று சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் அறிவித்தார்.
உள்துறை சார்பில் இதற்கான அரசாணை கடந்த ஏப்.20-ம் தேதி வெளியிடப்பட்டது. அதை செயல்படுத்தும் விதமாக, தமிழகம் முழுவதும் உள்ள மதுபானசில்லறை விற்பனை கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து, அவற்றை ஜூன் 22-ம் தேதி (இன்று) முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மேற்கண்ட 500 கடைகளும் இனிமேல் செயல்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 160 மதுக்கடைகளில் 15 கடைகள் வியாழக்கிழமை முதல் மூடப்படுகின்றன. தஞ்சாவூர் கரந்தை போக்குவரத்துக் கழகப் பணி மனை அருகே, நாகை சாலை, கீழவாசல், அண்ணா சாலை, கீழ அலங்கம், மானோஜியப்பா வீதி, வடக்கு ராஜ வீதி, கிழக்கு காவல் நிலைய சாலை, தெற்கு அலங்கம், சாந்தப்பிள்ளை கேட், பட்டுக்கோட்டை சந்தை சாலை, மணிக்கூண்டு, முத்துப்பேட்டை சாலை, உதயசூரியபுரம், அய்யம்பேட்டை குறிஞ்சி நகர் ஆகிய கடைகள் மூடப்படுகின்றன.
எங்கு, எத்தனை கடைகள்..:
சென்னை வடக்கில் 20, சென்னை மத்தியில் 20, சென்னை தெற்கில் 21, காஞ்சிபுரம் வடக்கில் 15, காஞ்சிபுரம் தெற்கில் 16, திருவள்ளூர் கிழக்கில் 32, திருவள்ளூர் மேற்கில் 14 என சென்னை மண்டலத்தில் 138 கடைகள் மூடப்படுகின்றன.
கோயம்புத்தூர் மண்டலத்தில் கோவை வடக்கு, தெற்கு, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூரில் 78 கடைகள் மூடப்படுகின்றன. மதுரை மண்டலத்தில் மதுரை வடக்கு, தெற்கு, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனியில் 125 கடைகளும், சேலம் மண்டலத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணத்தில் 59 கடைகளும் மூடப்படுகின்றன.
திருச்சி மண்டலத்தில் திருச்சி, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள 100 கடைகள் என தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 5,329 கடைகளில் 500 கடைகள் நேற்று முதல் மூடப்பட்டது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.