நாடு முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தில் காணப்படுகிறது. கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி நேற்று தமிழகத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் முதற்கட்டமாக 15 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது. தஞ்சையில் 8 கடைகளிலும், கும்பகோணத்தில் 7 கடைகளிலும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் 15 கிலோ வழங்கப்பட்டு ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் ஒருவருக்கு அரை கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இனி அடுத்த கட்டமாக மாவட்டத்தில் பல்வேறு ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.