சம்பைப்பட்டிணத்தில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சம்பைப்பட்டிணத்தில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) மாவட்ட தலைவர் H.சாதிக் பாட்ஷா தலைமையில் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள் முன்னிலையில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சம்பைப்பட்டிணம் கடைவீதியில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் இது தான் இஸ்லாம்
என்ற தலைப்பில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் P.ஜைனுல் ஆபிதீன் சிறப்புரை நிகழ்த்தினார். சொர்க்கத்தின் நன்மைகள் என்ற தலைப்பில் NTF மாநில செயலாளர் M.யாசிர் அரஃபாத் இம்தாதி உரையாற்றினார், தொடர்ந்து
தியாக பெண்மணிகள் என்ற தலைப்பில் NTF மாநில செயலாளர் அதிரை பாரூக், ஆகியோர் உரையாற்றினார். பொதுக் கூட்டத்தில் மழை வந்த போதும் பொதுமக்கள் ஆங்காங்கே நின்றபடி பொதுக்கூட்ட உரையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பொதுக்கூட்ட முடிவில் NTF கிளை தலைவர் H.காதர் பாட்ஷா நன்றியுரை நிகழ்த்தினார்.
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.