சேதுபாவாசத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அழகியநாயகிபுரத்தில் தூக்கில் தொங்கியபடி அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அழகியநாயகிபுரம் சிஎம்பி வாய்க்கால் கரையில் உள்ள ஆலமரத்தில் சுமார் 27 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இறந்தவர் டார்க் பச்சை கலர் பேண்ட், வெள்ளை ஊதா கலர் சட்டையும் அணிந்து உள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேதுபாவாசத்திரம் போலீசார் இறந்தவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات