செந்தலையில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்

K.M.C. மருத்துவமனை மற்றும் செந்தலை ஊராட்சி & செந்தலை பொதுநல சங்கம் இணைந்து முதலமைச்சரின் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று காலை முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

முகாமில் இரத்த சர்க்கரை அளவு கண்டறிதல், இரத்த அழுத்த பரிசோதனை,ECG பரிசோதனை, மூட்டுவாதம் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனை, வயிறு, குடல்வால், பித்தப்பை கல் மருத்துவரின் ஆலோசனை, இருதய மருத்துவரின் ஆலோசனை பொது மருத்துவரின் ஆலோசனைகளும் பரிசோதனைகளும் நடந்தது. முகாமில் சுமார் 450 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

முகாமில் மருத்துவர்கள்: Dr.M.சலீம் MS.,Mch (Ortho)., (எலும்பு முறிவு, முடநீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணர் ) Dr.V.காமாட்சி சந்திரன் MS.,Dip.Lap (பொது மற்றும் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை நிபுணர் )  Dr.J.சுதாபாலாஜி M.D (O&G) (மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர் ) Dr.S. சரவணன் MD.,DM(Cardio). (இருதய சிகிச்சை நிபுணர் ) Dr.S.பிரசாந்த் MBBS,FEM.,
(அவசர சிகிச்சை நிபுணர் ) ஆகிய மருத்துவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.




-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات