செந்தலை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய கட்டிட திறப்புவிழாவில் கலந்து கொண்ட MLA . அசோக்குமார்.


தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியம் செந்தலைவயல் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதிய கட்டிடம் கட்ட கடந்த பிப்ரவரி மாதம் ஊராட்சி சிறப்பு திட்டம் மற்றும் ஒன்றிய பொது நிதி திட்டம் 2022-23 மூலம் செந்தலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடப் பணி துவக்க விழா பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் N.அசோக்குமார் MLA அவர்களின் தலைமையில் நடைபெற்றது, தொடர்ந்து கட்டுமான பணி நடைபெற்று முழுமையாக பணி நிறைவு பெற்று இன்று தொடக்கப் பள்ளியின் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. 

புதிய பள்ளி கட்டிட திறப்பு விழாவிற்கு பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் N.அசோக்குமார் MLA அவர்கள், (தலைமை செயற்குழு உறுப்பினர்) மு.கி.முத்துமாணிக்கம் ஒன்றிய பெருந்தலைவர் (ஒன்றிய கழக செயலாளர் சேதுபாவாசத்திரம் வடக்கு)
வை.ரவிச்சந்திரன் (ஒன்றிய கழக செயலாளர் சேதுபாவாசத்திரம் தெற்கு ) செந்தலை ஊராட்சி மன்ற தலைவர் ரகுமத்துல்லா, கவுன்சிலர் செய்யது மற்றும் கட்சி உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊர் ஜமாத்தார்கள் , பொதுமக்கள் இதில் கலந்துகொண்டானர்.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்