நம்மைக் காக்கும் 48 திட்டம் – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு - தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பட்டியல்

தமிழக அரசின் இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் வகையில் ‘இன்னுயிர் காப்போம்’ என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுப்பதற்கு, விபத்தில் சிக்குவோரின் சிகிச்சைக்காக உதவும் வகையில், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. 

இத்திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் விபத்து நடந்தாலும், விபத்து நடந்த பகுதியில் விபத்துக்கு உள்ளானவரை மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையும், விபத்தில் சிக்கியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்பதுதான் இந்த “இன்னுயிர் காப்போம்” என்ற திட்டமாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை சிகிச்சை கட்டணத்தில் ரூ.1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக 201 அரசு மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் மாவட்ட வாரியாகப் பட்டியலிடப்பட்டு பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் https://cmchistn.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மருத்துமனைகளின் பட்டியல்:

தஞ்சை மாவட்டத்தில்:

1. அரசு மருத்துவமனை பாப்பநாசம்,
2. அரசு மருத்துவமனை பேராவூரணி, 
3. அரசு மருத்துவமனை பூதலூர்,
4. அரசு மருத்துவமனை பட்டுக்கோட்டை,
5. அரசு தலைமை அலுவலகம் மருத்துவமனை கும்பகோணம்,
6. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தஞ்சாவூர், 
7. அன்பு மருத்துவமனை தஞ்சாவூர், 
8. அனு மல்டிஸ்பெஷியாலிட்டி மருத்துவமனை தஞ்சாவூர்,
9. தக்ஷ்னா மருத்துவமனை,
10. தர்ஷ்ணா மருத்துவமனை,
11. ஓ.எல்.ஹெச்., தஞ்சாவூர்,
12. கல்பனா ஆர்த்தோ ஸ்பெஷாலிட்டி, தஞ்சாவூர்,
13. கனகேச தேவர் நினைவு மருத்துவமனை தஞ்சாவூர்,
14. KG மல்டி ஸ்பெஷல்டி மருத்துவமனை தஞ்சாவூர்,
15. மெட்வே மருத்துவமனை தஞ்சாவூர்,
16. மீனாட்சி மல்டிஸ்பெஷலிட்டி மருத்துவமனை தஞ்சாவூர்,
17. MR மருத்துவமனை தஞ்சாவூர், 
18. MVK நர்சிங் ஹோம் தஞ்சாவூர்,
19. ரோகிணி மருத்துவமனை தஞ்சாவூர்,
20. RR மருத்துவமனை,
21. சேக்ரட் ஹார்ட் மல்டிஸ்பெஷலிட்டி மருத்துவமனை தஞ்சாவூர்,
22. ஸ்ரீ நாடி மருத்துவமனை பட்டுக்கோட்டை,
23. சுகம் மருத்துவமனை தஞ்சாவூர்,
24. விஜய் பாலி கிளினிக் கும்பகோணம்,
25. வினோதகன் மெமோரியல் மருத்துவமனை தஞ்சாவூர்,

புதுக்கோட்டை மாவட்டத்தில்:

1. அரசு மருத்துவமனை விராலிமலை,
2. அரசு மருத்துவமனை அறந்தாங்கி,
3. தமிழ்நாடு அரசு புதுக்கோட்டை MCH,
4. டாக்டர் முத்துராஜா மல்டி ஸ்பெஷல்டி மருத்துவமனை,
5. முத்து மீனாட்சி மருத்துவமனை, புதுக்கோட்டை,
6. புதுகை ஸ்டார் மருத்துவமனை புதுக்கோட்டை,
7. ஸ்ரீ விஜய் மருத்துவமனை மனமேல்குடி.
மேலும் விபரங்களுக்கு https://cmchistn.com



-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்