அதிரையில் பள்ளியை கைப்பற்றும் முடிவை கைவிட வேண்டும்: தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்

அதிராம்பட்டினத்தில் உள்ள இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தைக் கைப்பற்றும் முடிவைத் நகராட்சி நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அரை நூற்றாண்டாக இமாம் ஷாஃபி பள்ளி கல்விப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பள்ளியை மூட வேண்டும் என நகராட்சி நிா்வாகம் முத்திரையிட்டுள்ளது. இமாம் ஷாஃபி பள்ளி தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அந்தக் கல்வி நிலையத்தின் பெயா்ப் பலகை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தை கைப்பற்றும் முடிவை நகராட்சி நிா்வாகம் திரும்பப் பெற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات