பட்டுக்கோட்டை அருகே நடந்த அதிசயம்! சாகுபடி செய்யாமல் 16 மூட்டை மகசூல்

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (52). இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு குறுவை நெல் பயிரிட்டு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்தார். ஆனால் போதுமான மகசூல் இதனால் அடுத்து சாகுபடி செய்யாமல் நிலத்தை தரிசாக விட்டுவிட்டார். இதனால் வயல்பக்கம் போகவே இல்லை.

இந்நிலையில் அப்பகுதியினர் 2 நாட்களுக்கு முன் ஜெயராஜை தொடர்பு கொண்டு வயலில் பயிர் முற்றி சாய்ந்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது. ஏன் இன்னும் அறுவடை செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டனர். இதைக்கேட்ட ஜெயராஜ் அதிர்ச்சியடைந்தார். யாராவது தன்னைக் கேட்காமல் நடவு செய்தார்களா என்ற சந்தேகத்தில் வயலுக்கு சென்று பார்த்தபோது நெற்பயிர் விளைந்திருப்பது கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து ஆட்களை வைத்து அறுவடை செய்தார். இதில் இரண்டு ஏக்கரில் மொத்தம் 16 மூட்டை மகசூல் கிடைத்தது. இதுகுறித்து ஜெயராஜ் கூறுகையில், கடந்த முறை நெல் சாகுபடி செய்தபோது போதிய மகசூல் இல்லாமல் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் முன் அடுத்து சாகுபடி செய்யாமல் விட்டுவிட் டேன். இந்நிலையில்தான் வயலில் நெற்பயிர் விளைந்திருப்பது தெரியவந்தது. கடந்த முறை கதிர் அறுத்து விட்டு அடியில் உள்ள அறுப்பு தாளிலிருந்து பயிர் வளர்ந்து அதில் நெல் விளைந்திருக்கிறது. இது ஆச்சரியமாக உள்ளது என்றார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات