அதிராம்பட்டினம் பகுதி விவசாய நிலங்களுக்கு படை எடுக்கும் வெளிநாட்டு பறவைகள்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அலையாத்திக்காடு பகுதியில் வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகள் வறண்டு போனதால் விவசாய நிலங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் படையெடுத்து வருகின்றன. 

தஞ்சை மாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, கரிசக்காடு கருங்குளம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட கடற்கரையோரம் அலையாத்தி காடுகள் உள்ளன. ஆண்டு தோறும் நவம்பர் முதல் மழை தொடங்குவதால் அலையாத்திக்காடு பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி பறவைகளுக்கு ஏற்ற சூழல் காணப்படும். இதனால் இலங்கை, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா சிங்கப்பூர் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து போனாரை கூழைகிடா, செங்கால் நாரை, நீர்க்காகம், ஊசிவால் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வந்து குவியும். அலையாத்தி காடு பகுதியில் சரணாலயம் போல் காட்சி தரும். பின்னர் கோடை காலம் துவங்கும் நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பறவைகள் தங்கள் சொந்த நாடுகளுக்கு சென்று விடும். 

சில மாதங்களுக்கு முன்பு கோடை மழை பெய்ததால் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியதால் வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டது. கடந்த சில நாட்களாக கடும் வெயில் காரணமாக நீர்நிலைகள் வறண்டு வருகிறது. இதன் காரணமாக வழக்கமான குளிர்ச்சியான நிலை மாறியதால் அலையாத்தி காடுகளை விட்டு வெளிநாட்டு பறவைகள் விவசாய நிலங்களுக்கு படை எடுக்கத் தொடங்கியுள்ளன.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات