தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேருந்து நிலையம் அருகே, 'ழ' பவுண்டேசன் சார்பில், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் திறப்பு, இயற்கை விவசாயிகள் லீக் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இலவச பயிற்சி மையத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், ஓய்வு பெற்ற கடலூர் ஆட்சியர் வெ.அன்புச் செல்வன், பயிற்சி துணை ஆட்சியர் விஷ்ணுபிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினர். திருப்பூர் விக்னேஷ் நோக்கவுரையாற்றினார்.
'ழ' பவுண்டேசன் நிறுவனர், கார்க்கி அசோக்குமார் தலைமை வகித்து பேசியதாவது,
"தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான பேராவூரணியில், உள்ள மாணவ, மாணவிகள் வெளியூர் சென்று நேரத்தையும், பொருளாதாரத்தையும் செலவு செய்து, இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்கோ, அரசுப் பணிகளுக்கோ படிக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் ஒரே இடத்தில் அனைத்து பயிற்சிகளையும் இலவசமாக பெறும் வகையில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அறிவுறுத்தலின்படி,
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.
திறன் மேம்பாடு, தொழில் ஆராய்ச்சி குறித்தும் மாணவர்களுக்கு ஐஏஎஸ் பயிற்சி மையம் மூலம் இணையவழி பயிற்சி வழங்கப்படும். பின்தங்கிய நமது பகுதியில் இருந்து இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களாக, அரசு உயர் அலுவலர்களாக வரும் காலங்களில் தேர்வு செய்யப்படுவதை, உறுதி செய்யும் வகையில் 'ழ' பவுண்டேஷன் செயல்படும்" என்றார்.
இதில், வெங்கடேஷ்வரா கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இரா.திருமலைச்சாமி வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், மாவட்ட கவுன்சிலர்கள் இலக்கியா நெப்போலியன், அலிவலம் மூர்த்தி, வழக்குரைஞர் குழ.செ.அருள்நம்பி, மருத்துவர் சந்திரசேகர், விளையாட்டு மேம்பாட்டு அணி பட்டுக்கோட்டை விஜயகுமார், நடராஜன், பன்னீர்செல்வம், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இயற்கை விவசாயிகள் லீக் போட்டியில் வெற்றி பெற்ற அலிவலம் சுரேஷ் என்ற விவசாயிக்கு ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.