செந்தலைப்பட்டினம் அல்மத் ரஸத்துஸ் உஸ்வத்துல் ஹஸனா அரபி பெண்கள் மத்ரஸாவின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா


தஞ்சாவூர் மாவட்டம் செந்தலைப்பட்டினம் அல்மத் ரஸத்துஸ் உஸ்வத்துல் ஹஸனா அரபி பெண்கள் மத்ரஸா கல்லூரியின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா 04.03.2022 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் செந்தலைப்பட்டினம் ஜமாத் பொறுப்பாளர்கள் தலைமையில் பொதுநல சங்கம் மற்றும் வளர்ச்சி மன்றம் பொறுப்பாளர்கள் முன்னிலையில் செந்தலைப்பட்டினம் அல் மஸ்ஜிதுல் அக்ஸா மைதானத்தில் நடைபெற உள்ளது.

மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவை அர்ஷாத் ( மாணவர் மத்தப் மதரஸா ) கிராத் ஓதி தொடங்கப்படுகிறது. செந்தலைப்பட்டினம் அல்மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் இமாம் மௌலானா மெளலவி முகமது இப்றாஹிம் வரவேற்ப்புரை நிகழ்த்துகிறார்.

காயல்பட்டினம் அஜ்ஜாவியாத்துஸ் ஷாதுலியா மத்ரஸா முதல்வர் மௌலானா மெளலவி அல்ஹாஜ்
S.K.M.ஹாஜா முகைதீன் காஷிஃபி ஹம்ரத் அவர்கள் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேருரை நிகழ்த்த சிறப்புரை மொலானா மௌலவி M.S.அப்துல் ஹாதி பாகவி ஹம்ரத் (ஆசிரியர், மதரஸத்துல் நிஸ்வான் அதிராம்பட்டினம்), மொலானா மௌலவி M.முகம்மது இத்ரீஸ் காஷிபி ஹம்ரத் (ஆசிரியர் மத்ரஸத்துல் நூர், அதிராம்பட்டினம்.), மௌலானா மெளலவி M.S.முகம்மது மீரான் காஷிபி ஹன்யத்து (ஆசிரியர், மதரஸத்துல் நிஸ்வான், அதிராம்பட்டினம்) நன்றியுரை : உஸ்வத்துல் ஹஸனாத் நிஸ்வான் மதரஸா நிர்வாக சபை செந்தலைப்பட்டினம்.

இந்த மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அல்மத் ரஸத்துஸ் உஸ்வத்துல் ஹஸனா அரபி பெண்கள் மத்ரஸா முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவிகள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி அமைக்கப்பட்டுள்ளது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات