தற்போதைய காலகட்டத்தில் கிராமங்கள், நகரங்கள் என வேறுபாடின்றி எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பணப்பரிமாற்ற புழக்கம் அதிகரித்துவிட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஏராளமானோர் பயன்படுத்தும் செயலியாக பேடிஎம் (Paytm) உள்ளது. இந்நிலையில், பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி, பேடிஎம் நிறுவனம் மீது அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 29ஆம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாடு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு, புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்ள பேடிஎம் பேமெண்ட் பேங்க் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் தணிக்கையாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தொடர் விதி மீறலில் பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் ஈடுபட்டது தெரியவந்தது.
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் இந்த தடை உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பேடிஎம் வாலட்களில் ஏற்கனவே உள்ள தொகையை பயன்படுத்த தடை இல்லை. பேடிஎம் செயலி மூலம் பயனர்கள் யுபிஐ முறையில் பணத்தை அனுப்பவும், பெறவும் முடியும். அதன் இயக்கம் வழக்கம் போலவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.