அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தஞ்சையில் TNTJ சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, TNTJ தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தலைவர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் தாவூத் கைசர் கண்டன உரையாற்றினார்.
வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்புச்சட்டம், இந்திய நாடு சுதந்திரம் பெறும் போது எந்தெந்த வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அவை அப்படியே தொடர உத்தர வாதம் அளித்தது. ஆனால், அதற்கு மாறான நடவடிக்கைகளில் ஆளும் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. ஜனநாயகமும், சட்டநெறி முறைகளும் குழி தோண்டி புதைக்கப்படுகின்றன. எனவே அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ், துணைத் தலைவர் ஜாஃபர், துணைச் செயலாளர்கள் அப்துல்லா, சேக் அப்துல் காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும் பெண்கள், குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனர்.
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.