போக்குவரத்து விதிமீறல்கள் இந்தியாவில் சர்வ சாதாரணமாக இருந்த காரணத்தால் அபராதங்களை மத்திய அரசு 2019ம் ஆண்டு கடுமையாக்கியது. புதிய மோட்டார் வாகன சட்டம் சட்டத்தின் படி 46 வகையான போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. தலைகவசம் அணியாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த விதி கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு மட்டும் இன்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ரூ. 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000, இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் பயணித்தால் ரூ.1000, கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ.1000 என அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் அதிக எடையை ஏற்றுவது, சிக்னல்களில் சிவப்பு விளக்கு ஒளிரும் போது நிற்காமல் செல்வது உள்ளிட்ட பல்வேறு வகையிலான விதிமீறல்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்கிறார்கள். சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், பாதுகாலர் அல்லது பெற்றோருக்கு 25000 அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. போக்குவரத்து விதிமீறல்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்ட போதிலும் விதிமீறல் தொடர்கிறது.
இந்நிலையில் ஹெல்மெட் அணிந்தாலும் சோதனையின் போது அவர்கள் சரியாக அணியவில்லை என்று தெரிந்தால் 2000 ரூபாய் அல்லது 1000 ரூபாய் வசூலிக்க புதிய விதி சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாம்.. இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற போக்குவரத்து விதி அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஹெல்மெட் அணியத் தவறினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
ஹெல்மெட்டை பெல்ட்டுடன் சரியாக இணைத்துக் கொண்டு செல்லாவிட்டால் அல்லது பழுதடைந்த மோசமான ஹெல்மெட் அணிந்தால் அதற்கும் சேர்த்து 1000 ரூபாய் அல்லது 2000 அபராதம் விதிக்க போகிறார்கள்... பலர் ஹெல்மெட்டை பெயருக்கு அணிந்து செல்வதால் விபத்தை தடுக்க முடியவில்லை.. ஹெல்மெட் அணிந்தும் சரியாக அணியாத காரணத்தால் இறக்கும் நிலை உள்ளது.. எனவே தான் புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளதாம்.
Source from: oneindiatamil
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.