ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில் பட்டுக்கோட்டையிலிருந்து மாணவிகளுக்கான சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில், தமிழக முதல் அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் மார்ச் மாத உறுப்பினர்கள் கூட்டம் ஆலோசகர் வ.விவேகானந்தம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், நிர்வாகிகள் ஜெயசீலன், ரெஜினால்டு செல்வகுமார், எம்.எம்.சுகுமார், ஈகா.வைத்தியநாதன், மா.வீரபத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் . கூட்டத்தில், பட்டுக்கோட்டையில் இருந்து ஒரத்தநாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சிரமம் இல்லாமல் மாணவிகள் செல்லும் வகையில் சிறப்பு பேருந்தை கட்டணத்துடன் இயக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.