சவுதி, அமீரகம், குவைத் ரமலான் நோன்பு அட்டவணை Ramadan time table 2024

வளைகுடா நாடுகளில் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது.

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட நிலையில் இன்று(மார்ச் 11) முதல் ரமலான் நோன்பு துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் நேற்று (மார்ச் 10) ரமலான் பிறை பார்க்கும் நிகழ்வு நடந்தது. அதன்படி சவூதி அரேபியாவில் நேற்று பிறை தென்பட்டுள்ளது. இதனால் இன்று (மார்ச் 11 - திங்கட்ழமை) முதல் ரமலான் மாதம் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஷபான் மாதத்தின் கடைசி நாள் என்றும் இன்று (மார்ச் 11) ரமலான் மாதத்தின் முதல் நாள் என்றும் சவுதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியது.

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சவுதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால், குவைத், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று முதல் ரமலான் நோன்பு ஆரம்பம் ஆனது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, பொதுவாக சவூதி அரேபியாவுக்கு மறுநாள் ரமலான் நோன்பு தொடங்கும். எனவே வரும் செவ்வாய்க்கிழமை இங்கு ரமலான் தொடங்க வாய்ப்புள்ளது. இருப்பினும் பிறை பார்த்தே ரமலான் நோன்பு அறிவிப்பு வெளியாகும்.

Saudi arabia 
United Arab Emirates
Kuwait 
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات