செந்தலைப்பட்டினத்தில் பொதுநல சங்கம் சார்பாக 110 குடும்பங்களுக்கு மேல் இந்த வருடத்திற்க்கான ஃபித்ரா வழங்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினம் கிராமத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட பொதுநல சங்கம், சமூக சேவை மற்றும் பல பொது சேவைகளில் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவை முதல் ஊருக்கு தேவையான அடிப்படை தேவை, மருத்துவ உதவி, திருமண உதவி, சமூக விழிப்புணர்வு போன்ற பல சேவைகளை இதுவரை எந்த தடையும் இல்லாமல் பொதுநல சங்கம் செய்து வருகிறது.
ரமலான் மாத வணக்கங்களில் ஜகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். பிற காலங்களை விட ரமலான் மாதத்தில் அதிகமாக தர்மம் செய்ய நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக, பெருநாள் தினத்தன்று புத்தாடை அணிந்து, அறுசுவை உணவருந்தி, மகிழ்வை பகிர்ந்து கொள்வதில் ஏழை, பணக்காரர்களுக்கு மத்தியில் வித்தியாசம் காணாமல், இஸ்லாமிய சகோதரத்துவம் நிலைநாட்டப்படவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஜகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையான தர்மமாக்கியுள்ளார்கள்.
பொது நல சங்கம் தொடர்ச்சியாக கடந்த 9 வருடங்களாக நோன்பு காலங்களில் கடமையாக்கப்பட்ட ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் பொருட்களை வருடா வருடம் வழங்கி வருகின்றது. இந்த வருடமும் அதற்கான தொகை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஊர் மக்களிடம் நிர்வாகத்தின் சார்பாக வசூல் செய்யப்பட்டு நேற்று சுமார் 110 -க்கும் மேல் உள்ளூர் ஏழை எழிய மக்களுக்கு ஃபித்ரா நேற்று மாலை சங்க நிர்வாகிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்ட பொருள்கள் !!
அரிசி - 5. Kg
சீனி - 1.Kg
கடபாசி - 50.கிராம்
சேமியா பாக்கெட் - 1 (மதிப்பு 20 ரூ)
சவ்வரிசி - 100 கிராம்
முந்திரி திராட்சை பாக்கெட் 1 - (மதிப்பு 20 ரூ)
ஏலக்காய் - 10 பாக்கெட் 1
நெய் - 50 கிராம்
கோல்டு வின்னர் - 1.லி
சிக்கன் மசாலா பாக்கெட் 1
காய்கறி- 150 ரூ
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.