செந்தலை மற்றும் வளைகுடா நாடுகளில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் ! புகைப்படங்கள்..

நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் ஈதுல் ஃபித்ர் என்பது  இஸ்லாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும். ஈத் என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள் / பெருநாள் என்பது பொருளாகும். இந்தியாவில் இஸ்லாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இன்று 11/04/2024 நோன்பு பெருநாள்   கொண்டாடப்படுகின்றது.

இந்த சிறப்புமிக்க பொருநாள் தொழுகையை இன்று காலை நமது செந்தலைப்பட்டினம் அல்அக்சா பள்ளியில் மிக சிறப்பாக நடடைபெற்றது. பின்பு நமது ஊர் பொதுமக்களும் இளைஞர்களும் வாழ்த்துக்களையும் அன்பையும் பரிமாரிக்கொண்டனர்.

நேற்று வளைகுடா நாடுகளில் ஈகைத் திருநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதைப் போன்று தமிழகம் முழுவதும் TNTJ அமைப்பின் சார்பாக பிறை பார்க்கப்பட்டதாக கூறப்பட்டதன் அடிப்படையில் ஈகைத்திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இன்று ஈகை திருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் செந்தலை மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்களுடன்.....
செந்தலை நியூஸ்.

உள்ளூர்
வெளிநாடு
TNTJ
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

إرسال تعليق

0 تعليقات