பொதுநல சங்கம் மற்றும் ஜமாத்தார்கள் சார்பில் CISF சைக்கிள் பயணக்குழுவுக்கு உற்சாக வரவேற்பு !!

செந்தலைப்பட்டினம், பிப்.17 — கடலோர பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக பங்களிப்பை மேம்படுத்தும் வகையிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வீரர்கள் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 22 வரை 'வந்தே மாதரம் கடலோர சைக்ளோதான்' என்ற விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளது. 25 நாட்கள் நடைபெறும் இந்தப் பயணத்தில் 64 வீரர்கள் (33 பெண்கள், 31 ஆண்கள்) 6553 கிலோமீட்டர் தூரம் பயணிக்கின்றனர்.

“Vande Mataram CISF Coastal Cyclothon 2026” என்ற தேசிய அளவிலான சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வரும் CISF வீரர்கள் இன்று காலை செந்தலைப்பட்டினம் பகுதியில் வருகை தந்தனர். CISF வீரர்களுக்கு செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் சார்பில் இன்று சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்சி இன்று காலை  பொதுநல சங்க அலுவலகம் அருகே நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் ஜமாத்தார்கள் மற்றும் பொதுநல சங்க நிர்வாகிகள் பள்ளி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்