திருச்சி அருகே பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்ற பிரமாண்ட இஜ்திமா கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்த இஜ்திமா இன்று திங்கள்கிழமை வரை சிறப்பாக நடைபெற்று நிறைவுபெற்றது.
இந்த இஜ்திமாவிற்கு இலங்கை, சவுதி அரபேபியா, மலேசிய, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக் கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை காலை பஜ்ரு தொழுகைக்கு பிறகு சிறப்பு துஆவுடன் இஜ்திமா மாநாடு தொடங்கியது. அதைத்தொடர்ந்து மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.வளர்ந்து வரும் நாகரிக உலகில் பிரமாண்டமான முறையில் திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு மாறாக நபிவழி சுன்னத் என்பதன் அடிப்படையில் எளிமையான முறையில் ஞாயிற்றுக்கிழமை மாநாட்டு திடலில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இஜ்திமா இன்று திங்கள் கிழமை லுஹர் தொழுகைக்கு பிறகு சிறப்பு தூஆவுடன் நிறைவு பெற்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இஜ்திமா இன்று திங்கள் கிழமை லுஹர் தொழுகைக்கு பிறகு சிறப்பு தூஆவுடன் நிறைவு பெற்றது.
K. ஜஹாங்கிர்அலி









0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.