செந்தலையில் SNCC அணியினரால் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு தொகையை தட்டி சென்ற குருவிக்கரம்பை இரண்டாம் பரிசு தொகையை தட்டி சென்ற செந்தலை SNCC
தஞ்சை மாவட்டம் செந்தலைப்பட்டினத்தில் SNCC அணியினரால் நடத்தப்பட்ட 15 - ம் ஆண்டு சுழற்கோப்பைக்கான மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி ஜனவரி 17 மற்றும் 18.01.2026 ஆகிய தேதிகளில் செந்தலைப்பட்டினம் EC சாலை அருகில் அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் இப்போட்டியில் பங்குபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் செந்தலை SNCC அணியும் குருவிக்கரம்பை அணியும் மோதின இறுதியில் குருவிக்கரம்பை அணி வெற்றிப்பெற்றது.
முதல் பரிசு ரூ.20,000 வென்ற அணிக்கு செந்தலை Ex. ஊராட்சிமன்றத் தலைவர் M. முகமது ரபீக் அவர்கள் பரிசு தொகையை வழங்கினார். இரண்டாம் பரிசு ரூ.15,000 வென்ற அணிக்கு J.ரியாஸ் அகமது மற்றும் SNCC அணியின் சார்பாக வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.10,000 பரிசு தொகையை F. முகமது மிராசா மற்றும் S.A .மாலிக் இவர்களின் சார்பாக வழங்கப்பட்டது. நான்காம் பரிசு தொகை ரூ.5,000 R.வாபிக் மற்றும் M.மகாதீர் இவர்களின் சார்பாக வழங்கப்பட்டது.
பரிசு பெற்றி அணிகள்:
முதல் பரிசு : குருவிக்கரம்பை
இரண்டாம் பரிசு : SNCC
மூன்றாம் பரிசு : தொண்டி
நான்காம் பரிசு : மல்லிப்பட்டினம் மற்றும் கோட்டைக்காடு
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.