செந்தலை வயல் கிராமத்தில் திமுகவின் கிராம சபா கூட்டம்!



தஞ்சாவூர் மாவட்டம், செந்தலை வயல் கிராமத்தில் திமுகவின் கிராம சபா கூட்டம் இன்று (ஜன 31) மாலை 4 மணியளவில் நடைபெற்றது.

திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராம சபா கூட்டம் நடைபெற்று வருகிறது. நமது ஊர் மக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மக்களின் குறைகளை TKM.செல்வகணபதி Ex. MP அவர்கள் கேட்டறிந்தார்.மேலும் கஜாவில் பாதிக்கப்பட்ட பகுதியான  அரசு நிவாரணம் மற்றும் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை என்றும் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கிடுவதில்லை என்றும் பொதுமக்கள் முறையிட்டனர்.

குறைகளை கேட்ட பின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிடுவதாக கூறினார்.கூட்டத்தில் பேராவூரணி முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக் குமார்,ஒன்றிய பொருப்பாளர் ரவிசந்திரன் மற்றும் மூத்த நிர்வாகிகள்   கட்சியின் நிர்வாகிகள் ,  செந்தலை கிராம திமுகவின் நிர்வாகிகள்,தோழமை கட்சியினர்,பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

தகவல் : M. அன்வர்தீன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்