கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களை பார்க்க அடிப்படை கட்டணம் 155 ரூபாய் !


அதிகரிக்கும் கட்டணம்:

ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நெட்வொர்க் கெபாசிட்டி கட்டணமாக 130 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இதனுடன் 18% ஜிஎஸ்டி சேர்த்து 153.40 ரூபாய் கட்ட வேண்டுமென்று கூறப்பட்டது. தூர்தர்ஷன் உட்பட குறைந்தபட்சம் 100 சேனல்கள் இவ்வாறு ஒளிபரப்பாகுமென்றும், பார்வையாளர்கள் தங்களுக்கென்று தேவைப்படும் சேனல்களுக்கான கட்டணத்தை ஜிஎஸ்டி தொகையுடன் சேர்த்துத் தனியாகக் கட்ட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.

மக்களுக்கு கட்டண சுமை:

இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. டிராயின் இந்த புதிய விதிமுறைக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் 200 ரூபாய்க்கு மேல் வசூலிக்க வேண்ய நிலை ஏற்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும், பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக டிராய் செயல்படுகிறது என்றும் கேபிள் ஆபரேட்டர்கள் குற்றம்சாட்டினர்.

இலவச சேனல்கள் 18 % ஜிஎஸ்டி:


1 முதல் 100 இலவச சேனல்களைப் பார்க்க 130 ரூபாய் உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி எனச் சேர்த்து 153.50 ரூபாயை வாடிக்கையாளர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 125 இலவச சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் ரூ.150 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி சேர்த்து 177 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 150 இலவச சேனல்களைப் பார்க்க வேண்டும் என்றால் ரூ. 170 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி என 200.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 175 இலவச சேனல்களைப் பெற வேண்டும் என்றால் ரூ. 190 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி என 224.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
200 இலவச சேனல்கள் வரை பார்க்க வேண்டும் என்றால் ரூ. 210 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி என 248 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இப்படித் தொடர்ந்து கூடுதலாக மேலும் 25 இலவச சேனல் வேண்டும் என்றால் அடிப்படை கட்டணத்துடன் மேலும் 25 ரூபாய் கட்டணம் கூடுதலாக ஜிஎஸ்டி எனத் திட்டம் நீள்கிறது.

சன் குழும சேனல்கள், ஜீ குழும சேனல்கள், ராஜ் குழும சேனல்கள், ஸ்டார் குழும சேனல்கள், கலர்ஸ் சேனல், மெகா டிவி போன்றவை கட்டண சேனல்களாக உள்ளன. கட்டண சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிய அடிப்படை திட்டங்களுள் ஒன்றைத் தேர்வு செய்துகொண்டு கட்டண சேனல்களுக்கான கட்டணம் கூடவே 18 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்