தஞ்சை மாவட்டத்தில் இன்று துவங்கிய பிளஸ்2 பொதுத்தேர்வில் 13,130 மாணவர், 16,426 மாணவிகள் என மொத்தம் 29,556 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் இன்று (1ம் தேதி) துவங்கி வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. இதில் தஞ்சை மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 22 தேர்வு மையங்களில் 3,401 மாணவர்கள், 3,998 மாணவிகள் என மொத்தம் 7,399 பேர் எழுதுகின்றனர். கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 26 தேர்வு மையங்களில் 4,284 மாணவர், 5420 மாணவிகள் என மொத்தம் 9,704 பேரும், தஞ்சை கல்வி மாவட்டத்தில் 33 தேர்வு மையங்களில் 3,734 மாணவர், 4846 மாணவிகள என மொத்தம் 8580 பேர் தேர்வெழுதுகின்றனர். ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் 15 தேர்வு மையங்களில் 1,711 மாணவர், 2,162 மாணவிகள் என மொத்தம் 3,873 பேரும் என மொத்தம் 13,130 மாணவர்கள், 16,426 மாணவிகள் என மொத்தம் 29,556 மாணவ, மாணவிகள் பிளஸ்2 தேர்வெழுதுகின்றனர்.
இத்தேர்வு நடைபெறும் மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.