சாலை விதிகளை பின்பற்றாதவர்களுக்கு 10 மடங்கு அதிகரித்த அபராத தொகை!


போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்டு வரும் அபராதத் தொகை பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

போக்குவரத்து நெரிசல், அதிக விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக போக்குவரத்து விதிகள் இயக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், இதைச் துச்சமாக நினைக்கும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுக் கொண்டுத்தான் இருக்கின்றார்கள். ஆகையால், விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் விதமாக தற்போது விதிக்கப்பட்டு வரும் அபராதத் தொகையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட உள்ளன.

* குடித்துவிட்டு வாகனத்தை இயக்குபவர்களிடம் தற்போது வசூலிக்கப்படும் ரூ. 2 ஆயிரத்திற்கு பதிலாக, ரூ. 10 அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.

* வேகமாக இயக்கப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் ரூ. 1,000 ஆயிரம் அபராதம், ரூ. 5 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது.

* சீட் பெல்ட் அணியாமல் காரை இயக்குபவர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட உள்ளது. இந்த குற்றத்திற்காக தற்போது நூறு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகின்றது.

* 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால், அபராதம் விதிப்பது மட்டுமின்றி வாகனத்தின் உரிமையாலரை சிறையிலடைக்கவும் புதிய விதியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக,  சிரியவர்கள் வாகனத்தை இயக்குவதை அவர்களின் பெற்றோர்கள் தவிர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

* ஹெல்மெட் அனியாமல் வாகனங்களை இயக்கினால் வசூலிக்கப்பட்ட ரூ 100 க்கு பதிலாக 1000 ரூபாய் வசூலிக்கப்படும். மூன்று மாதத்திற்கு லைசன்ஸ் ரத்து செய்யப்படும்.

* ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு இடம் விடாமல் சென்றால் முன்பு அபராதம் எதுவும் கிடையாது ஆனால் இப்போது ரூபாய் 10,000 அபராதமாக விதிக்கப்படும்.

* லைசன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் விதிக்கப்பட்ட ரூ 500-க்கு பதிலாக 5000 ரூபாய் வசூலிக்கப்படும்.

* அதிக பாரம் ஏற்றி வாகனங்களை இயக்கினால் ரூ 2000 க்கு பதிலாக 20,000 அபராதமாக விதிக்கப்படும்.



சாலை விதிகளை மதிப்போம்.....
நம் பணத்தை பாதுகாப்போம்.....

தொகுப்பு: k. அன்வர்அலி

கருத்துரையிடுக

1 கருத்துகள்

உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......

* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.