ராஹத் பேருந்து விபத்தில்...தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு தனியார் ராஹத் பஸ்புறப்பட்டது. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.பஸ்சை பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா(வயது 40) என்பவர் ஓட்டினார்.
இந்த பஸ் அதிகாலை 2 மணியளவில், கடலூர் மாவட்டம் வடலூர் ஆசிரியர் பயிற்சி நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதி, சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பேராவூரணி வி.டி.எம். கோட்டையை சேர்ந்த அசோகன் மகள் எம்.எஸ்சி. பட்டதாரியான ஹரிணி(24) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏன் இந்த விபத்து நடக்கிறது
என்பதற்கு பலகாரணங்கள் இருக்கிறது.குறிப்பாக தனியார் ஆம்னி பேருந்துகள்..
என்பதற்கு பலகாரணங்கள் இருக்கிறது.குறிப்பாக தனியார் ஆம்னி பேருந்துகள்..
பேராவூரணியில் இருந்து சென்னைக்கு 370கி.மீ ECR வழியாக..தோராயமாக மணிக்கு 70kms வேகத்தில் சென்றால் கூட 6 மணி நேரத்தில் சென்னையை சென்று அடைந்துவிடலாம்.. ஆனால் அப்படி செல்லமாட்டார்கள் இந்த ஆம்னி பேருந்துக்காரர்கள்..
பேராவூரணியில் 8 மணிக்கு கிளம்பும் பேருந்துக்கள்
ஒவ்வொரு ஊராக சென்று அங்கு பார்சல்களை ஏற்றுகின்றனர்..
இவ்வாறாக தஞ்சாவூர் கும்பகோணம் வரையிலும் பார்சல்களையும் விடுபட்ட பயணிகளையும் ஏற்றி முடிக்கவே 12மணி ஆகிவிடுகிறது..
ஒவ்வொரு ஊராக சென்று அங்கு பார்சல்களை ஏற்றுகின்றனர்..
இவ்வாறாக தஞ்சாவூர் கும்பகோணம் வரையிலும் பார்சல்களையும் விடுபட்ட பயணிகளையும் ஏற்றி முடிக்கவே 12மணி ஆகிவிடுகிறது..
அதன் பின்னரே பஸ் மின்னல் வேகம் பிடிக்கிறது அதுவும் 90 முதல் 110 கீமி வேகத்தில்..
12மணிக்கு கிளம்பும் பேருந்து அசுர வேகத்தில் காலை 5மணிக்குள்ள சென்னை சிட்டிக்குள் சென்றாக வேண்டும் என்கிற காரணத்திற்காகவா?
இல்லையென்றால் போலீஸ்க்கு கப்பம் கட்ட வேண்டும்.. அல்லது OUTER பைபாஸில் சென்றால் பயணிகளிடம் திட்டு வாங்க வேண்டும் என்பதற்காகவா?
இல்லையென்றால் போலீஸ்க்கு கப்பம் கட்ட வேண்டும்.. அல்லது OUTER பைபாஸில் சென்றால் பயணிகளிடம் திட்டு வாங்க வேண்டும் என்பதற்காகவா?
ECR சாலை நன்றாக இருந்தாலும் பரவாயில்லை படுமோசம்...அங்கங்கே மாடுகள் ஆடுகள் என ஒரு புறம்..வேகத்தடைகள் இன்னொருபுறம்..இப்படியான சாலையில் பேருந்தை இயக்குவதற்கு சரியான ஒட்டுநர்கள் இல்லையென்பது வேதனையான விசயம்..
CoolLip Hans போயிலை சிகரெட் என அத்தனை போதை பொருட்களோடு தான் டிரைவர்களும் இருப்பார்கள்..
நேற்று நடைப்பெற்ற விபத்தில் கூட குடிபோதையில் ஒட்டுநர் இருந்தாககூறப்படுகிறது.
எனவே ஆம்னி பேருந்துக்களை இயக்கும் ஒட்டுநர்களை ஆங்காங்கே போலிஸார்கள் பரிசோதனை செய்தால் மட்டுமே இது போன்ற விபத்துகளை தவிர்க்க முடியும்..
மேலும் ஒட்டுநர் வேலைக்கு சேர்க்கும் முன் அவர்களுக்கு அனுபவம் இருக்கிறதா.. நடத்தைகள் எவ்வாறு இருக்கிறது என உரிமையாளர்கள் பரிசோதிக்க வேண்டும்.. எனவேதான் தன் வேளைக்காக வெளியூர் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பாகவும் நம்புக்கையுடனும் பயணம் செய்ய முடியும்.


Follow Social Plugin