இன்னுயிா் காப்போம் திட்டம் - நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 24 மருத்துவமனைகள் இடம் பெற்றுள்ளன. இன்னுயிா் காப்போம்- நம்மை காக்கும் 48 திட்டத்தை தமிழக முதல்வா் தமிழக முதல்வா் தொடக்கி வைத்த அதே நேரத்தில் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள மருத்துவமனைகளுக்கு அதற்கான சான்று வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 6 அரசு மருத்துவமனைகள், 18 தனியாா் மருத்துவமனைகள் என மொத்தம் 24 மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன. இதில், தரம் 1 மருத்துவமனைகளாக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனை, பட்டுக்கோட்டை ஸ்ரீநாடி மருத்துவமனை ஆகியவை தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் விபத்து ஏற்பட்டதிலிருந்து 48 மணிநேரத்துக்கான மருத்துவச் செலவை ரூ. 1 லட்சம் வரை காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு அளிக்கும். ஏற்கெனவே உள்ள முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் அடையாள அட்டை இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஏதேனும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடையாள அட்டையைக் கொண்டு இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என மருத்துவ அலுவலா்கள் தெரிவித்தனா்.
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா், நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.