முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம்!


தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஜூலை 18-ஆம் தேதியன்று முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து நகர்ப்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்துக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் அரசுத் துறை அலுவலர்கள் குழுவானது மக்களிடம் மனுக்களைப் பெற உள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள்ளாக அவர்கள் மனுக்களைப் பெற்று அவை கணினியில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒரு வாரத்துக்குள் அனுப்பப்படும். 

இந்த மனுக்கள் மீது ஒரு மாத காலத்துக்குள் தீர்வு எட்டப்படும்.
மனுக்களின் மீதான தீர்வுக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவில் விழாக்கள் நடத்தப்படும். என தமிழகஅரசு அறிவித்துள்ளது.

நமது ஊர் மக்கள் தங்களின் கோரிக்கை மனுவை வருகிற 27/08/2019 அன்று காலை  தங்களின் மனுக்களை அரசுதுரை அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும். அந்த மனு மீதான தீர்வு ஒரு மாதத்திற்குள் கிடைக்கும்.