எஸ்பிஐ ஏடிஎம்-ல் இரவு 8 டூ காலை 8 மணி வரை பணம் எடுக்க ஓடிபி அவசியம்.


இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியாக களத்தில் நிற்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அவ்வப் போது பாதுகாப்பு கருதி சில மாற்றங்களைக் கொண்டு வருகிறது.இப்போதும், தன் வாடிக்கையாளர்களின், பணத்தை பாதுகாப்பாக கை மாற்ற, ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகளைச் செய்ய, சில புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எஸ்பிஐ எடுத்து இருக்கிறது.

ஏடிஎம் பணப்பரிமாற்றங்களுக்கு ஓடிபி கொண்டு வந்து இருக்கிறது எஸ்பிஐ. அதாவது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை, 10,000 ரூபாய்க்கு மேல் ஏடிஎம் வழியாக பணத்தை எடுக்க வேண்டும் என்றால், (OTP) ஒன் டைம்  பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டி இருக்கும். ஒடிபி இல்லாமல் 10,000 ரூபாய்க்கு மேலான பணத்தை எடுக்க முடியாது.

இந்த ஓடிபி சேவை எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு, எஸ்பிஐ ஏடிஎம்-ல் எடுத்தால் மட்டுமே கிடைக்கும். எஸ்பிஐ வங்கிக் கணக்குடன் இணைத்து இருக்கும் மொபைல் எண்ணுக்குத் தான் ஒடிபி வரும். எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்கிற விவரத்தைக் ஏடிஎம் இயந்திரத்தில் கொடுத்த பின், ஒடிபி எண்ணை கேட்கும். ஒடிபி கொடுத்தால் தான் பணம் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்