தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சி தலைவர், 16 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 30-ஆம் தேதி 163 வாக்குச்சாவடிகளில் வாக்குபதிவு நடைபெற்றது.
செந்தலைவயல் ஊராட்சியில் நடந்த தேர்தலில் 73.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின. செந்தலைவயல் ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க சார்பாக M.ரகுமத்துல்லா அவர்களும், SDPI கட்சி சார்பாக J. ரியாஸ் அஹமது அவர்களும் போட்டியிட்டனர்.
நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று இரவு நமது ஊர் வாக்குகள் எண்ணப்பட்டன இதில் செந்தலையில் போட்டியிட்ட ரகுமத்துல்லா தன்னை எதிர்த்து போட்டியிட்ட SDPI கட்சியை சார்ந்த ரியாஸ் அஹமதுவை விட - 560 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க சார்பாக போட்டியிட்ட
K .செய்யது முகமது போட்டியிட்டு முதல் முறையாக உள்ளூரை சேர்ந்தவர் வெற்றிபற்று வரலாற்று சாதனை படைத்தார்.

0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.