டெல்லியில் உள்ள ஜும்ம மசூதிக்கு அருகே டெல்லி காவல்துறையினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ரமலான் நோன்பிருக்கும் முஸ்லிம் மக்கள் அனைவரும், நாடு முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அவரவர் இல்லங்களிலேயே தொழுகையை நடத்துமாறும் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி வாயிலாக வலியுறுத்தினர்.
ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று ஏராளமான முஸ்லிம் மக்கள் மசூதிக்கு வந்து தொழுகை நடத்துவது வழக்கம் என்பதால், இன்றைய தினம் முன்னெச்சரிக்கையாக டெல்லி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தி, இப்பகுதியை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்தனர்.
மேலும், முஸ்லிம் மக்கள் மசூதிக்கு வருவதைத் தவிர்க்கும் பொருட்டு ஒலிப்பெருக்கி வாயிலாகவும் கோரிக்கையை முன்வைத்தனர்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.