இந்தியாவில் கொரானா வைரஸ் அதிகமாக பரவுவதால் இந்தியர்கள் தங்களின் நாட்டுக்குள் வர மலேசிய அரசு தடை விதித்துள்ளது .இது இந்தியர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் சீனாவுக்கு அடுத்து அதற்கு பக்கத்து நாடான மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்தான் முதலில் பரவியது ,அப்போதெல்லாம் நாம் எந்த மலேசியரையும் நம் நாட்டுக்குள் வரக்கூடாது என்று தடை விதிக்கவில்லை .ஆனால் இப்போது இந்தியாவில் அதிகமாக பரவியதும் மலேசிய அரசு இந்தியர்கள் மலேசியா வர தடை விதித்துள்ளது.
இந்த தடை பற்றி மலேசிய அரசின் குறிப்பில் கூறப்படுவது என்னவெனில், இந்தியாவில் சமீபகாலமாக கொரானா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், இந்தியாவிலிருந்து வருவோருக்கு அந்த பாதிப்பு இருக்குமென்பதால் ,அவர்கள் வந்தால் தங்களின் நாடுகளிலும் நோய் அதிகமாக பரவுமென்பதாலும் தங்கள் நாட்டு மக்களை வைரஸிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் சில காலங்களுக்கு நோயின் வீரியம் குறையும் வரையில் இந்தியா ,பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து யாரும் மலேசியாவிற்கு வரவேண்டாமென்று அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது .இந்த தடையால் வர்த்தக விஷயமாக அடிக்கடி மலேசிய போவோர் மத்தியிலும் ,குடும்பத்தை பிரிந்து மலேசியாவில் வாழ்வோர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியலையை உண்டாக்கியுள்ளது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.