செந்தலைப்பட்னத்தில் ஊராட்சி நிர்வாகம் தனது பணிகளை சிறப்பாக செய்துவருகின்றது.
சாலைகளை சீரமைத்தல் :
கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தலைப்பட்டினத்தில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகள், மற்றும் வாய்க்கால் குழாய்களை சரிசெய்தது ஊராட்சி நிர்வாகம். மழை நீர் பலநாட்கள் தேங்கி கிடந்தால் சுகாதார பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அரசு நிதி வர தாமதமாகும் என்பதால் தனது சொந்த செலவில் சாலை மற்றும் வாய்க்கால் குழாய்களை சரி செய்தார் செந்தலை ஊராட்சி மன்றத் தலைவர் ரகுமத்துல்லா அவர்கள்.
கடற்கரை சீரமைப்பு பணி:
நமது ஊரின் மீனவர்களால் பல வருட கோரிக்கையாக இருந்த இன்ஜின் பழுது நீக்கம், படகுகளை சீரமைத்தல், தச்சு வேலைபாடுகள், படகு வர்ணம் பூசுதல் போன்ற பணிகளுக்கு. மின்சாரம் (கரண்ட) இல்லாமல் நமது ஊர் கடற்கரையில் மீனவர்கள் சிரமபட்டு வந்தார்கள். அந்த சிரம்மங்களை போக்க
நமது ஊர் கடற்கரையில் தனி மீட்டர் பொருந்தி படகுகளை சரி செய்வதற்கு மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்தது ஊராட்சி நிர்வாகம். மேலும் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டு படகுகள் நிறுத்தும் இடம் சரி செய்யப்பட்டது, கடற்கரையில் புதிதாக 3 மின் கம்பம் நட்டு தெரு விளக்கு போடப்பட்டு உள்ளது.
இரவு பெய்த மழை :
நேற்று இரவு பெய்த மழையில் மேலத்தெருவில் தண்ணீர் தேங்கும் என்பதால் நேற்று இரவு முதல் தற்போது வரை வடிகால் சரி செய்யும் பணியில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொதுநல இளைஞர்கள் ஈடுபட்டுள்ளார். மீனவர் காலனியில் சில மாதங்களுக்கு முன்பு முக்கிய வாய்க்கால் சரி செய்யப்பட்டதால் இன்று மீனவர் காலனியில் மழை நீர் அதிகம் தேங்காமல் குறைந்த அளவு மழை நீர் தேங்கி இருக்கின்றது. விரைவில் அது முழுமையாக நீர் வடியும் அளவு சரி செய்யப்படும் எனவும், மேலத்தெருவில் தேங்கிய நீரை வெளியேற்ற அத் தெருவில் இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் நீர் வடிய மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினால் அதற்கான முழுமையான தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் ஊராட்சி தலைவர்.
2 கருத்துகள்
Allahu Akbar
பதிலளிநீக்குAllahu Akbar
பதிலளிநீக்குஉங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.