பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா காலமானார்

உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா தனது 84 ஆவது வயதில் காலமானார்.

பஹ்ரைன் சுதந்திரம் அடைந்த பின்பு 1971ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற இளவரசர் கலிஃபா அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்று அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. பஹ்ரைன் மன்னர் ஹமாதின் உறவினரான கலிஃபா அந்நாட்டு அரச குடும்பத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒருவராக இருந்தார்.

1942 முதல் 1961 வரை ஆட்சி செய்த பஹ்ரைனின் முன்னாள் ஆட்சியாளரான ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபாவின் மகன்தான், இந்த கலீஃபா. தனது தந்தையிடமிருந்து ஆட்சி நிர்வாகத்தை இவர் கற்றுக்கொண்டார்.சகோதரர் ஷேக் ஈசா பின் சல்மான் அல் கலீஃபா 1961இல் பஹ்ரைன் ஆட்சியைப் பிடித்தார். இதனிடையே 1971 இல் பஹ்ரைன் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றபோது மன்னராக பணியாற்றினார்.

கலிஃபா பிரதமரான பிறகு, எண்ணெய் இருப்புக்கள் குறைந்து வருவதை கவனித்து, அதையும் தாண்டி பஹ்ரைன் வேகமாக முன்னேற சுற்றுலாத் துறையை மேம்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்