காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இம்முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆக்சல்ஸ் இந்தியா, டிவிஎஸ், ரெய்சிங் ஸ்டார், என்சிஆர் கார்ப்பரேசன், மிட்சுபா இந்தியா பி.லிட், எஸ்பி அப்பாரெல்ஸ், சென்னை சில்க்ஸ், ஜேபிஎம் ஆட்டோ லிட், ஐஐஎப்எம், அப்போலோ, மெட்பிளஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக டைடன் ஜூவல்லரி, யூத் 4 ஜாப்ஸ் போன்ற நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இதில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங், பி.இ. ஆகிய கல்வி தகுதிக்கேற்ப வேலை நாடுவோருக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு இடம் நிரப்பப்பட உள்ளன. இதில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கலந்து கொண்டு நர்சிங், ஐடிஐ பயின்றோர் இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஓமன் போன்ற வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கான ஆள் சேர்ப்பும் நடைபெற உள்ளது.
டைலரிங், பியூட்டிசியன், டிரைவிங் மற்றும் கணினி பயிற்சி உள்ளிட்ட இலவச திறன் பயிற்சிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு திறன் பயிற்சி வழங்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற நபர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே விருப்பம் உள்ள வேலை நாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதார் அட்டை (இருப்பின்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளுமாறும் மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள ஏதுவாக தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கும் கல்வித் தகுதி மற்றும் ஊதியம் ஆகிய விவரங்களை pvtjobfairtnj@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.