கொரோனா தீவிரம் சவுதி அரேபியாவில் கடுமையாக்கப்பட்ட கட்டுபாடுகள்!

சவுதி அரேபியா கோவிட் வைரஸ் தீவிரமடைந்து வருவதால் இரவு முதல் கடுமையான கட்டுப்பாடுகளை உள்துறை அமைச்சகம் விதித்துள்ளது. ஹோட்டல்களில் திருமண விருந்துகள் மற்றும் கூட்டங்கள் ஒரு மாதத்திற்கு தடை செய்யப்பட்டன. ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் பத்து நாட்களுக்கு முதல்கட்டமாக தடை செய்யப்பட்டுள்ளன. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமரக்கூடாது, பார்சல்களில் மட்டுமே உணவு வழங்கப்பட வேண்டும். 

பார்ட்டி உட்பட ஹோட்டல் மற்றும் ஆடிட்டோரியங்களில் நடைபெறும் அனைத்து கூட்டங்களும் ஒரு மாதத்திற்கு தடை செய்யப்பட்டன. ஒரு மாதத்திற்கு திருமண மண்டபங்களுக்கும் இந்த தடை பொருந்தும் என்று தெரிவித்துள்ளது. திரைஅரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், விளையாட்டு மையங்கள், ஜிம்கள் மற்றும் விளையாட்டு மையங்களை முதல்கட்டமாக பத்து நாட்களுக்கு மூட முடிவு செய்துள்ளது. சமூகக் கூட்டங்களில் கொரோனா நெறிமுறைகள் பின்பற்றி அதிகபட்சம் 20 பேர் மட்டுமே கலந்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

புதிய உத்தரவுகளை மீறுவது கண்டறியப்பட்டால் முதல்கட்டமாக 24 மணிநேரமும், இரண்டாவது கட்டமாக 48 மணிநேரமும், மூன்றாவது மீறல் கண்டறியப்பட்டால் ஒரு வாரமும், நான்காவது கண்டறியப்பட்டால் ஒரு மாதத்திற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சமூக கூட்டங்கள் மூடப்படும் அதிகாரிகள் சோதனையின் போது சி.சி.டி.வி சரிபார்த்து நடவடிக்கை எடுக்கும். நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு 300 க்கும் மேற்பட்ட கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் சவுதி விதிமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன. 

இதற்கிடைய இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 20 நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு விமானத் தடை நேற்று புதன்கிழமை இரவு முதல் காலவரையின்றி நடைமுறைக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. புதிய முடிவுகள் 04 /02/20  வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்