தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மேற்கு வங்கம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதியோடு வாக்குப்பதிவு முடிவடைந்தது. ஏப்ரல் 29ஆம் தேதி தான் மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இச்சூழலில் இன்று ஐந்து மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
தற்போதைய நிலவரத்தின் படி திமுக 158 தொகுதிகளிலும் அதிமுக 75 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதிமுக முக்கியப் புள்ளிகள் பலர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். அமைச்சர்கள் எம்ஆர் விஜய பாஸ்கர், மாஃபா பாண்டியராஜன், சரோஜா, ராஜலட்சுமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். இச்சூழலில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி ஜோலார்பேட்டையில் தோல்வி கண்டார். அவரைத் தொடர்ந்து தொகுதி மாறி ராஜபாளையத்தில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜியும் தோல்வியைத் தழுவியிருக்கிறார். மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார் தோல்வி முகத்தில் இருக்கின்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.