செந்தலையில் ஈகை திருநாள் கொண்டாட்டம் ! புகைப்படங்கள்.

ஈகைத்திருநாள்  ( நோன்பு பெருநாள் ) உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய மக்கள் நேற்று மற்றும் இன்று கொண்டாடுகின்றனர்.

கொரோனா நோய் பரவல் இரண்டாம் அலை அதிகரித்துவருவதன் காரணமாகவும் மே 24 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் வெகு விமர்சையாக கூட்டுதொழுகை நடத்தவேண்டிய நோன்பு பெருநாள் தொழுகை வீடுகளில் தனி மனித இடைவெளி கடைபிடித்து குடும்பத்தார் ஒன்று கூடி அவர் அவர் பகுதிகளில் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டனர். செந்தலைப்பட்டினதில் சமூக இடைவெளி கடைபிடிக்கபட்டு உறவினர்கள், நண்பர்களுடன் அவரவர் இல்லங்களில்   சிறப்பான முறையில் கடமையானா நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி தங்களின் மகிழ்ச்சியை மற்றவர்களுடன், பகிர்ந்து கொண்டு இளைஞர்கள் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

அதை போன்று நேற்றைய தினம்
(13/05/2021 ) சவுதி அரேபியா , ஐக்கிய அரபு அமீரகம் , குவைத், கத்தர் , பஹ்ரைன் மற்றும் வளைகுடா நாடுகளில் வாழும் நமது ஊர் மக்கள் மிகவும் குதூகலத்துடன் சமூக இடைவெளியுடன் ஈகைத்திருநாளை கொண்டாடினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்