Job vacancies: கும்பகோணத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கும்பகோணம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 27 11 2021 சனிக்கிழமை அன்று கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் 10:30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த, டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பிஇ கல்வித்தகுதி உடைய வேலை தேடுவோருக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளனர். விருப்பமுள்ள வேலை தேடுவோர் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதேனும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன், இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர், தங்களது சுய விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் விவரங்களுக்கு  04362-237037, 04362-277907 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்