பெருமகளூர் பேரூராட்சியில் நூறுநாள் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

டிச.14-- அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பெருமகளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு, தமிழக அரசு அறிவித்துள்ள நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், தஞ்சை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள, பெருமகளூர் பேரூராட்சியில், தொழிலாளர்கள் வேலை கேட்டு மனு கொடுக்கும் இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இந்த, போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் ஏ.எம்.கணேசன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஆ.இளங்கோவன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில், வி.தொ.ச மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, மாவட்டத் தலைவர் ஆர்.வாசு, மாவட்டப் பொருளாளர் கே.அபிமன்னன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 

மாவட்டக்குழு வீ.கருப்பையா, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எம். வீரப்பெருமாள் (சேதுபாவாசத்திரம்), எம்.இந்துமதி (பேராவூரணி) ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, பி.சேகர், சோனமுத்து, டி.விஜயா, செந்தில்குமார், த.வி.ச பேராவூரணி ஒன்றியச் செயலாளர் நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 150 மனுக்களை பேரூராட்சி செயல் அலுவலர் புனிதவதியிடம் வழங்கப்பட்டது. 

போராட்டத்தில், நூறுநாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக அதிகரித்து, கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் அறிவித்தவாறு, பெருமகளூர் பேரூராட்சியில் வேலையை உடனடியாக துவங்க வேண்டும். கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்