டிச.29-- தஞ்சை மாவட்டம் ரெட்டவயல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ரெட்டவயல் கிராம பொதுமக்கள் மற்றும் திமுக கிளைக் கழகம் சார்பில், பொதுமக்கள் கையெழுத்திட்டு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமாரிடம் நேரில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
"தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், ரெட்டவயல் ஊராட்சி சுற்றுவட்டாரத்தில், மணக்காடு,
ருத்ரசிந்தாமணி, கொளக்குடி, விளங்குளம், முதுகாடு ஊராட்சி ஆகியவை உள்ளது.
இதில் 6 ஊராட்சிகளில், சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த 50 கிராம மக்களும் தங்களுக்கு உடல்நலை பாதிப்பு ஏற்பட்டால், ஊமத்தநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது.
ஊமத்தநாடு செல்வதற்கு இடையே காட்டாறு உள்ளதால், பூக்கொல்லை சென்று 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. எனவே, பெருமகளூர் ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து சில கிராமங்களையும், ஊமத்தநாடு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து சில கிராமங்களையும் ஒன்றிணைத்து, ரெட்டவயல் பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.
ரெட்டவயல் செல்வதற்கு பேருந்து வசதி அமைந்து சிறந்த மையமாக உள்ளது. மேலும், அன்றாட பல்வேறு பணிகளுக்காக, சுற்றுவட்டார கிராம மக்கள், ரெட்டவயல் கடை வீதிக்கு வந்து செல்வதும் வழக்கம். எனவே, இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தந்தால் பெரும்பாலான மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.