தஞ்சாவூர் மாவட்டம்
பேராவூரணி சென்ட்ரல் ஜேசிஐ - நாடி பவுண்டேசன் இணைந்து நடத்திய பெண்களுக்கான ஐந்து நாள் இலவச கணினி பயிற்சியின் நிறைவு விழா பேராவூரணியில் நடைபெற்றது. ஜேசிஐ சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி மாணவர்களுடன் கலந்துரையாடினார். சிறப்பு விருந்தினர்களாக குருவிக்கரம்பை சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அஸ்வினி மற்றும் ஜேசிஐ மண்டல ஒருங்கிணைப்பாளர் கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மெய் சுடர் இதழ் ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் பேராசிரியர் முனைவர் கரம்சந்த் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி தனது உரையின்போது, "நாம் இன்னும் ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம். பெண்கள் மிகவும் சரியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். நம் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர்கள் பெற்றோர்கள்தான். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். பெண்கள் சுதந்திர உணர்வோடும் மிகுந்த கவனத்தோடும் இருக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இங்கு பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவிகள் வாழ்வில் உயர்ந்த இலக்குகள் கொண்டு செயல்பட வேண்டும்" என்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட குருவிக்கரம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அஸ்வினி பெண் கல்வியின் அவசியம் குறித்து பயனாளிகளிடம் உரையாடினார். பயிற்சியில் பெற்ற அனுபவங்களை மாணவிகள் கூறினர். சுமார் 70 பெண்கள் இந்தப் பயிற்சியின் மூலம் பயனடைந்தனர். பயிற்சி காலத்தில் சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து பயனாளிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக ஜேசிஐ ராஜராஜன் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சாம் வெஸ்லி நன்றி கூறினார். முகாமுக்கான ஏற்பாடுகளை, ஜேசிஐ மண்டல நிர்வாகிகள் சரபோஜி மற்றும் முனைவர் சத்திய.ஜெகதீசன், பேராவூரணி ஜேசிஐ தலைவர் ஜெயலட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.
செய்தி : முனைவர்
வேத கரம்சந்த் காந்தி (செய்தியாளர்)
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.