மௌலவி பட்டம் பெற்ற ஆதில்கான் அவர்களை கெளரவித்த பொதுநல சங்கம்

மௌலவி பட்டம் பெற்ற செந்தலையை சேர்ந்த ஆதில்கான் அவர்களை செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் இன்று கெளரவித்தது..

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தீன் நெறி கோட்டையாம்  பேட்டையில் அமைந்துள்ளது. மதரஸா ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரி. இது தமிழ்நாட்டில் வேலூர் மதரஸா அல் பாக்கித்துஸ் ஸாலிஹாத்திர்க்கு அடுத்து இரண்டாவது பெரிய மதரஸாவாகும். இம் மதரஸா  1870 ஆம்ஆண்டு ஆற்காடு நவாப்களின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த மதரஸாவில் ஒவ்வொரு வருடமும் நூறுக்கும் மேற்பட்டோர் மார்க்க கல்வி கற்றுவருகின்றனர். இதில் வருடம் தோறும் 20 மேற்பட்டோர் ஃபாஜில், மௌலவி மற்றும் ஹாபிழ் பட்டம் பெறுகின்றனர். இந்த மதரஸாவில் மார்க்க கல்வி கற்பதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், தென் இந்தியா விலிருந்தும், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள் வருகின்றனர்.

பட்டமளிப்பு விழா : 
ஒவ்வொரு வருடமும் ஹிஜ்ரி ஆண்டில் ரமலானுக்கு முன்பு ஷாபான் மாதம் மதரசாவின் பட்டமளிப்பு விழா நடைபெறும். இரண்டு பெருநாட்களுக்கு பிறகு அடுத்து ஊரே கொண்டாடும் ஒரு விழா எதுவென்றால் அது ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரி பட்டமளிப்பு விழாவாகும். அன்று ஊரே மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவிழா போல் காட்சியளிக்கும். எட்டு வருடம் ஓதி முடிப்பவர்களுக்கு பாஜில் பட்டமும், ஏழு வருடம் ஓதி முடிப்பவர்களுக்கு மௌலவி பட்டமும், குரானை மனனம் செய்து முடிப்பவர்க்கு ஹாபிஸ் பட்டமும் வழங்கப்படுகிறது. 

இதில் இந்த வருடம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் செந்தலையை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் J. ஆதில்கான் அவர்கள் மௌலவி பட்டம் பெற்று ஊர் திரும்பியுள்ளார். அவர்களுக்கு ஊர் மக்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆதில்கான் அவர்களுக்கு செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் சார்பில் இன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு நினைவு பரிசு வழங்கி கெளரவித்தது.

-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







கருத்துரையிடுக

0 கருத்துகள்